சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

மாநாடு படத்தை அடுத்து தமிழ் - தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கி உள்ள படம் கஸ்டடி. தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் கிருத்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் வெங்கட் பிரபு களம் இறங்கி இருப்பதை போன்று, முதன்முதலாக நாகசைதன்யா தமிழில் களமிறங்குகிறார். இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள டைம்லெஸ் லவ் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடலை கபில் கபிலன் பாடி இருக்கிறார்.