‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

மறைந்த பிரபல வசனகர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் காலமானார்.
தனது அசத்தலான நகைச்சுவை வசனங்களால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கிரேஸி மோகன். நடிகர் கமலின் நெருங்கிய நண்பரான இவர் அவரின் ஏராளமான படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி உள்ளார். ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2019ல் மாரடைப்பால் அவர் மறைந்தார். இந்நிலையில் கிரேஸி மோனின் மனைவியான நளினி இன்று(ஏப்., 18) காலமானார்.
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் பதிவு : ‛‛எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் நளினி கிரேஸி மோகன் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.