ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன், ஷிவாங்கி, புகழ், தலைவாசல் விஜய், மனோபாலா, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ள 'காசே தான் கடவுளடா' திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் தியேட்டர்களில் வெளியிடக் கூடாது என அந்த படத்திற்காக கடன் கொடுத்த ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனால், பணத்தை திருப்பி கொடுக்காமல் 'காசே தான் கடவுளடா' படத்தை வெளியிட மாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்த படத்திற்கான அனைத்து பிரச்னைகளும் தற்போது முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கடைசியாக மார்ச் 24ம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலையில் தற்போது மே 12ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1972ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் முத்துராமன், எம்ஆர்ஆர் வாசு, தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்டோர் நடித்த 'காசே தான் கடவுளடா' படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.