நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
காஷ்மீரில் இப்படத்தின் முதற்கட்ட 60 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இன்னொரு நடிகர் இணைந்துள்ளார். ஏற்கனவே கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மேத்தியூ தாமஸ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் என்பவரும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் இதற்கு முன்பு தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.