2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது | விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வியால் நடிப்பை விட்டே ஒதுங்கினேன் : நடிகை ரோஜா | மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அறிமுக இயக்குனர் டைரக்சனில் மோகன்லால் நடிக்கும் படம் டிசம்பரில் துவக்கம் | ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், ரஜினி சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. இன்னும் ஓரிரு நாட்கள் மட்டும் தான் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட வேண்டி உள்ளது. அடுத்தபடியாக தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார். இந்த படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் சென்னை மற்றும் மும்பையில் படமாக்கப்பட உள்ளது. அதன்பிறகு ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 170 வது படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது. அதோடு லால் சலாம் படத்தில் நடித்து வரும்போதே தனது 170 வது படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளார் ரஜினி. இந்த இரண்டு படங்களிலும் நடித்து முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்கிறார்.




