''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சாதனைகளுக்காக சில படங்கள் அவ்வப்போது தயாரிக்கப்படுதுண்டு, ஒரே ஷாட்டில், ஒரே அறையில், ஒரே நபர் நடிப்பில் இப்படியான சாதனை படங்கள் வரும். அந்த வரிசையில் 'பிதா' என்ற தலைப்பில் ஒரு படத்தை ஒரு நாளில் உருவாக்கி மறுநாளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
டான்ஸ் மாஸ்டர் கலாவிடம் உதவியாளராக எஸ்.சுகன் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் இதில் அனு, ஆதேஷ் பாலா, அருள்மணி, சாம்ஸ் நடிக்கின்றனர். இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, நரேஷ் இசையமைக்கிறார். பாபா கென்னடி வசனம் எழுத, வினோத் ஜாக்சன் லைவ் சவுண்ட் மூலம் ஒலிப்பதிவு செய்கிறார். விச்சூர் எஸ்.சங்கர் தயாரிக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் சுகன் கூறும்போது “இதுவரை 8 குறும்படங்கள் இயக்கியுள்ளேன். முதல்முறையாக சினிமா இயக்குவதால், ஏதாவது புதுமை செய்ய விரும்பினேன். முதல் நாள் காலையில் தொடங்கும் படப்பிடிப்பை நள்ளிரவு முடிகிறது. 80 சதவிகிதம் நைட் எஃபெக்ட் காட்சிகள் இடம்பெறுகிறது. 5 லொக்கேஷன்களில், 9 கேமராக்கள் மூலம் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. வருகிற 7ம் தேதி படப்பிடிப்பு தொடங்கி அன்றே அனைத்து பணிகளையும் முடித்து 8ம் தேதி வெளியிடுகிறோம்” என்றார்.