சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
குணசித்ர நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி. பல படங்களில் நாயகனாக நடித்தும் முன்னணி நடிகராக வர முடியவில்லை. இந்த நிலையில் அவர் நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இது ஒரு காதல் திருமணம். சமீபத்தில் திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது. திருமணத்தை பிரமாண்டமாக நடத்த அர்ஜூன் ஏற்பாடு செய்து வருகிறார்.
இந்த நிலையில் உமாபதி நடித்த 'பித்தல மாத்தி' என்ற படம் வருகிற 14ம் தேதி வெளிவருகிறது. இதில் மகனுடன் தம்பி ராமய்யாவும் நடித்துள்ளார். இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பால சரவணன், வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், மாணிக் வித்யா இயக்கி உள்ளார். ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.