'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை ஷோபிதா துலிபாலா. மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த குரூப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீப நாட்களாக நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஷோபிதா துலிபாலாவும் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம் இந்த வருடத்தில் கட்டாயம் பார்க்க வேண்டும் என்கிற மூன்று படங்களை பட்டியலிடுங்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், மஞ்சும்மேல் பாய்ஸ் மற்றும் தான் நடித்துள்ள மங்கி மேன் ஆகிய படங்களை குறிப்பிட்டார். மேலும் மம்முட்டியின் பிரம்மயுகம் படம் பற்றி தான் நிறைய கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அந்த படத்தை தனியாக பார்ப்பதற்கு எனக்கு ரொம்பவே பயமாக இருக்கிறது. நிச்சயமாக இரண்டு மூன்று பேரை என்னுடன் சேர்த்துக் கொண்டு தான் பிரம்மயுகம் படத்தை பார்ப்பேன். அப்போது தான் பயம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.