ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்தாண்டு டிசம்பர் 16ம் தேதி வெளியான படம் 'அவதார் - த வே ஆப் வாட்டர்' படம். அப்படம் தற்போது 14 வாரங்களைக் கடந்து அமெரிக்காவில் ஓடிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க அளவில் 678,872,600 மில்லியன் யுஎஸ்டாலர் வசூலைத் தற்போது கடந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 'அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படத்தின் வசூலான 678,815,482 மில்லியன் வசூலைக் கடந்து 7வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கடுத்து 6வது இடத்தில் இருக்கும் 'பிளாக் பாந்தர்' படத்தின் வசூலை 'அவதார் 2' படத்தின் வசூல் முறியடிக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள். 'பிளாக் பாந்தர்' படம் 700 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலுடன் 6வது இடத்தில் உள்ளது.
'அவதார் 2' 2304 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலுடன் உலக அளவிலான வசூலில் 3வது இடத்தில் உள்ளது.