இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் இளையராஜா - கமல் வாழ்த்து | இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து | ஜுன் 1, 2022ல் டிரைலர் வெளியீடு : ஜுன் 1, 2023ல் பட வெளியீட்டு அறிவிப்பு | ஜுன் 9ம் தேதி லாவண்யா திரிபாதி, வருண் தேஜ் திருமண நிச்சயதார்த்தம் | “பொன்னியின் செல்வன்” தந்த பொற்கால வெள்ளித்திரை இயக்குநர் மணிரத்னம் | பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை “இசைஞானி” இளையராஜா. | மாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது திருப்தி - உதயநிதி | தேவர் மகனுக்குப் பிறகு எனக்கு அருமையான படம் : வடிவேலு | 'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவு, கேக் வெட்டி கொண்டாட்டம் | வளர்ந்து வரும் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா |
ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், சங்கத் தமிழன் உள்பட பல படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். சமீபகாலமாக இவர் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது தஸ்கா தம்கி என்ற படத்தில் விஸ்வாக் சென்னுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படம் மார்ச் 22 ஆம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிவேதா பெத்துராஜ், ஒரு தியேட்டரில் ரசிகர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்து இருக்கிறார். படத்தின் நாயகியே டிக்கெட் விற்பனை செய்ததை பார்த்து ரசிகர்கள் போட்டி போட்டு அவரிடத்தில் டிக்கெட்டுகளை வாங்கி சென்று உள்ளார்கள். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.