பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பிரபல பாலிவுட் காமெடி நடிகர் கியாலி சஹாரன். 'சிங் இஸ் எ கிங்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர். அதோடு பல சமூக சேவைகளும் செய்து வருகிறவர். இவர் மீது தற்போது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
25 வயது இளம் பெண் ஒருவர் ராஜஸ்தானின் மானசரோவர் போலீஸ் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் நடிகர் கியாலி சஹாரன் வேலை வாங்கித் தருவதாக இரண்டு பெண்களை ஓட்டலுக்கு அழைத்ததாகவும், அந்த ஓட்டலில் அழைக்கப்பட்ட பெண்களுக்கு தனித்தனி அறை எடுத்து கொடுத்து அங்கு இன்டர்வியூ என்ற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், அதில் ஒரு பெண் தப்பி ஓடிவிட்டதாகவும், மாட்டிக் கொண்ட தான் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து கியாலி சஹாரன் மீது போலீசார் பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கியாலி சஹாரன் கைதாகலாம் என்று தெரிகிறது.