'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! | 'தனுஷ் 56' படத்தில் 'உறியடி' விஜய்குமார்? | 'சிக்மா' படத்தை நம்பும் லைகா நிறுவனம்! | ரஜினி 173வது படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட பிரபலம்! | தனுஷ் 55வது படத்தில் தெலுங்கு நடிகர்! | கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனிக்கு 'எம்போஹெர்' விருது | கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு | மம்முட்டி சுரேஷ்கோபி பட தயாரிப்பாளருக்கு நான்கு வருட சிறை ; 67 லட்சம் அபராதம் |

கடந்த 2015ல் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான ‛தனி ஒருவன்' படத்தில் ஜெயம் ரவியின் நண்பர்களில் ஒருவராக நடித்தவர் மலையாள நடிகர் ராகுல் மாதவ். மலையாள நடிகர் என்றாலும் இவர் அறிமுகமானது 2009ல் வெளியான அதே நேரம் அதே இடம் என்கிற தமிழ்ப்படத்தில் தான். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் தற்போது பிஸியான குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக நடித்து வருகிறார் ராகுல் மாதவ்.
கடந்தாண்டு இவர் நடிப்பில் 10 படங்கள் வெளியாகி உள்ளன. இந்தாண்டில் தற்போது கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் இவர் நடித்து வருகிறார். அதில் தமிழில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் டி-3 ஆகிய படங்களும் அடங்கும். இந்த நிலையில் 38 வயதான ராகுல் மாதவ் தற்போது திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைத்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிய முறையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் தனது வாழ்க்கை துணையாக தீபாஸ்ரீ என்பவரை கரம் பிடித்துள்ளார் ராகுல் மாதவ். இந்த நிகழ்வில் பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ், நடிகர்கள் நரேன் மற்றும் ஷைஜு குரூப் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.