விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
பத்து ஆண்டுகளுக்கு முன்பு விக்ரம், ஜீவா இருவரையும் இணைத்து 'டேவிட்' என்கிற படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். மணிரத்னத்தின் சிஷ்யரான இவர் பின்னர் துல்கர் சல்மானை வைத்து சோலோ என்கிற ஆந்தாலஜி படத்தை இயக்கினார். தொடர்ந்து ஹிந்தியில் சில படங்களை இயக்கிய இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் தயாரிப்பில் வெளியான நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தில் ஒரு குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ஹிந்தி மற்றும் தமிழில் இருமொழி படமாக உருவாகி வரும் போர் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் தமிழ் பதிப்பில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் நடிக்க, இதன் ஹிந்தி பதிப்பாக உருவாகும் டாங்கே படத்தில் இதே கதாபாத்திரங்களில் ஹர்ஷவர்தன் ராணே மற்றும் ஈஹான் பட் ஆகியோர் நடிக்கின்றனர். இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவு நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காளிதாஸ் ஜெயராமும் அர்ஜுன் தாஸும் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.