குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நாளை மார்ச் 12ம் தேதி இரவு 8 மணிக்கு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி திங்கள் கிழமை காலை நேரமாக இருக்கும்.
இந்த விருதுகளில் சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் தெலுங்குத் திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் தேர்வாகியுள்ளது. அப்பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என தெலுங்குத் திரையுலகத்தினர் மட்டுமல்ல மற்ற திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அடுத்து சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் 'செல்லோ ஷோ' படமும், சிறந்த டாகுமென்டரி திரைப்படப் பிரிவில் 'ஆர் தட் ப்ரீத்ஸ்' படமும், சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் 'த எலிபன்ட் விஸ்பரர்ஸ்' படமும் தேர்வாகியுள்ளது.
இந்த நான்கு விருதுகளுக்கான போட்டியில் எந்த இந்தியப் படம் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமையைத் தேடித் தரப் போகிறது என அனைத்திந்திய சினிமா ரசிகர்களின் கண்களும் ஆஸ்கர் விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறது.