அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்ட இசை அமைப்பாளர் சத்யா “பெண்ணே பெண்ணே” என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை அவரது மகள்கள் சினேகா மற்றும் வைமு ஆகியோர் பாடியுள்ளனர்.
இது குறித்து இசையமைப்பாளர் சி சத்யா கூறும்போது, “இது மகளிர் தினத்திற்காக உருவாக்கப்பட்ட பாடல். பொதுவாக, பெண்களின் அதிகாரம் மற்றும் பெண்மையை போற்றுவது பற்றி இந்த சமூகம் அடிக்கடி பேசுகிறது. ஆனால், அனைத்தும் வாய்மொழியாக மட்டுமே இருக்கிறது. உண்மையில், பெண்கள் மற்றும் சிறுமிகள் கூட துன்புறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்களை அன்றாடம் எதிர்கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.
எனவே, பாடல் வரிகள் இது குறித்து வலியுறுத்தும் சாயல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அதற்கு நேர்மாறாக, இசையில் ஒரு லைவ்லி பாப் ஆல்பம் உணர்வு இருக்கும். பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பாடலின் எண்ணம்" என்றார்.