ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைகிறார். 2017ம் ஆண்டு இந்த இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டது .
பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் இப்படம் வெளியாகமல் இருந்தது. சமீபத்தில் படத்தின் பின்னணி இசை பணிகள் தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி பற்றி தகவல் கிடைத்துள்ளது. அதன்படி வருகின்ற மே 19 அன்று திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.