'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள திரையுலகில் நேரம், பிரேமம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கோல்டு உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். மலையாள இயக்குனர் என்றாலும் அவர் சென்னையில் தான் சினிமா கற்றவர் என்பதால் தமிழ் சினிமா மீது எப்போதும் ஆர்வம் கொண்டவராகவும் இருந்து வருகிறார். குறிப்பாக ரஜினிகாந்த் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை பிரமிப்புடன் வெளிப்படுத்தவும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் வீடியோ மூலமாக பேசிய பேச்சை கேட்டுவிட்டு, “நடிகர் ரஜினிகாந்த் ஓஷோவை விட தனித்தன்மை வாய்ந்தவராக இருக்கிறார். அவரது பேச்சுக்களை கேட்கும்போது புல்லரிக்கிறது. யாரோ ஒரு சிலர் பேசினால் மட்டுமே இது போன்று ஒரு உணர்வு ஏற்படும். தற்போது அவர் ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் மட்டுமே இது போன்று பேசி வருகிறார்.
ஆனால் ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நுழைந்து தொடர்ந்து ஆக்டிவாக இதுபோன்று பயனுள்ள விஷயங்களை பேச வேண்டும். அவரது பேச்சை கேட்பதற்காக காத்திருக்கும் என்னைப் போன்ற மில்லியன், பில்லியன் ரசிகர்களின் விருப்பம் அதுதான்” என்று ரஜினிக்கு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.