தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி |

பிரகாஷ் இயக்கத்தில் விஜய் சிவன், சாந்தினி நடித்துள்ள படம் ‛குடிமகான்'. பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார். சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரித்துள்ளார்.
இப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய நடிகர் சதீஷ், ‛‛பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் அந்த வயதில் மதுப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருந்தால் அதன்பின் அதை நாம் தொடவே மாட்டோம். நான் அப்படித்தான் இதிலிருந்து ஒதுங்கினேன். இதுபற்றி சில கல்லூரிகளில் பேசியிருக்கிறேன். ஒரு பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இதே விஷயத்தை பேச சொன்னார் அந்த கல்லூரி முதல்வர். எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏன் என கேட்டதற்கு ஆண்களுக்கு சமமாக பெண்களும் இந்த வஷயத்தில் வளர்ந்து வருகிறார்கள் என்றார். என்னை பொருத்தமட்டில் ஆண், பெண் சமமானவர்கள் அல்ல. ஆண்களை விட பெண்கள் பல மடங்கு உயர்ந்தவர்கள். அவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள்'' என்றார்.