'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் புஷ்பா பாகம் 1. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அடர்ந்த காடுகளில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தாய்லாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் வரும் ஏப்ரல் 8ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இந்த படத்தின் சிறப்பு வீடியோவிற்கான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது .அல்லு அர்ஜூனின் பிறந்தநாளுக்கு இந்த வீடியோ ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.