'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் தற்போது காதலித்து வருகிறார்கள். இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிப்பதாக ஒரு கிசுகிசு இருந்து வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் இருவரும் சேர்ந்து ஒரு 'ரீல்ஸ்' வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
“டம் டம் டம்” பாடலுக்கு இருவரும் ஒன்றாக நடனமாடிய வீடியோவை நேற்று வெளியிட்டார் அதிதி ராவ். அந்த வீடியோவை இதுவரையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். பல பிரபலங்கள் சிறப்பாக நடனமாடியுள்ளதாக வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். 'டான்ஸ் மங்கிஸ், த ரீல் டீல்” என அந்த வீடியோவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் அதிதி.
சித்தார்த் இதற்கு முன்பு மேகா என்பவரைத் திருமணம் செய்து நான்கு வருடங்களில் விவாகரத்தானவர். அதிதி ராவ் ஹைதரி, கார்ப்பரேட் வக்கீலாக இருந்து நடிகர் ஆன சத்யதீப் மிஷ்ரா என்பவரைத் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார்.
சத்யதீப் மிஷ்ரா, கடந்த மாதம் மசாபா குப்தாவைத் திருமணம் செய்து கொண்டார். மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த அதிரடி கிரிக்கெட் வீரரான விவியன் ரிச்சர்ட்ஸ், நடிகை நீனா குப்தா ஆகியோரது மகள்தான் மசாபா குப்தா.
தங்களது முதல் திருமண வாழ்க்கையிலிருந்து விவாகரத்து பெற்ற சித்தார்த், அதிதி எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வியும் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருக்கிறது.