கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
பிரதீப் ரங்கநாதன் இயக்கம், நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'லவ் டுடே'. தமிழகத்தில் 100 நாட்களைக் கடந்து ஓடி 100 கோடி வசூலைக் குவித்த படம். தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் நல்ல லாபத்தைக் கொடுத்தது.
இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். ஹிந்தியில் பல படங்களைத் தயாரித்த பாந்தோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்க உள்ளார்கள்.
இது பற்றிய அறிவிப்பை பாந்தோம் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. “மிக விரைவில் ரசிகர்களின் அபிமானத் திரைப்படமாக மாறிய காதல் திரைப்படமான 'லவ் டுடே' படம், சமீபத்தில் தியேட்டர் வெளியீட்டில் 100 நாட்களைக் கடந்தது. 2022ம் ஆண்டில் வெளியான தமிழ்ப் படங்களில் பெரும் வெற்றியைப் பெற்ற ஒரு படம். அதன் ஒரிஜனல் தயாரிப்பாளரான எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து அப்படத்தை பாந்தோம் ஸ்டுடியோஸ் ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளது,” என தெரிவித்துள்ளார்கள்.
ஹிந்தி ரீமேக்கிற்கு பிரதீப் ரங்கநாதனும் வாழ்த்து தெரிவித்துள்ளார். படத்தை அவர் ஹிந்தியில் இயக்கப் போவதில்லை. விரைவில் இயக்குனர், மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.