சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் பவன் கல்யாண்? | இளம் இயக்குனர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு | ஐபிஎல் கிரிக்கெட்டில் அனிருத் கச்சேரி | பிளாஷ்பேக் : ஏகாதசி விரதத்தை பிரபலமாக்கிய படம் | துபாயில் அட்லி - அல்லு அர்ஜுன் தீவிர ஆலோசனை | வீர தீர சூரன் OTT-யில் வருமா? வராதா? | நெட்பிளிக்ஸிலும் வரவேற்பை பெற்ற "டிராகன்" | எல் 2 எம்புரான் - முதல் நாள் முன்பதிவிலும் சாதனை | ராஜமவுலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிருத்விராஜ் | பதட்டத்துடன் சிக்கந்தர் படப்பிடிப்பை நடத்திய ஏ.ஆர். முருகதாஸ் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக பிரபலமானவர் மரியானா ஜூலி. இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக வசவுகள் பெற்றவரும் இவர் தான். அதிக புகழ் பெற்றவரும் இவர் தான். முதல்முறை செய்த தவறை திருத்திக்கொள்ள பிக்பாஸ் அல்டிமேட்டில் என்ட்ரி கொடுத்து தன்னை வெறுப்பவர்களையும் ரசிகர்களாக்கினார். தற்போது ஜூலிக்கென ஒரு சிகர் வட்டாரம் உள்ளது.
இந்நிலையில், முன்னதாக சீரியல்களில் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்து வந்த ஜூலி, விஜய் டிவியின் தென்றல் வந்து என்னைத் தொடும் சீசன் 2வில் கேரக்டர் ரோலில் கமிட்டாகியுள்ளார். அதுவும் ஹீரோவை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
கதைப்படி ஹீரோயின் மீது கோபத்திலிருக்கும் ஹீரோவுக்கு ஜூலி தான் ஆதரவாக இருக்கிறார். எனவே, ஜூலியின் கதாபாத்திரம் இரண்டாவது நாயகியா? அல்லது வில்லியா? என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். ஜூலியின் சீரியல் எண்ட்ரியையும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.