பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! | சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்! | விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா! | சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம் | 'இறுகப்பற்று' படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி | ‛சப்தம்' படப்பிடிப்பு நிறைவு | சின்னத்திரை தொடரில் நடிக்கிறார் சித்தார்த் |
துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. தற்போது சூரரை போற்று படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார். இதையடுத்து மீண்டும் சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கப்போகிறார் சுதா. இந்த நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய்யை வைத்து ஒரு படத்தை இயக்க சுதா கொங்கரா முயற்சி எடுத்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் நரனின் வேட்டை நாய்கள் என்ற நாவலை தழுவி இந்த படத்தை அவர் எடுக்க திட்டமிட்டுள்ளாராம். அந்த கதைக்கு விஜய்யின் மகன் சஞ்சய் தான் பொருத்தமாக இருப்பார் என்பதால் இது குறித்த அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. தற்போது விஜய்யின் மகன் சஞ்சய் தனது தாத்தாவைப் போலவே திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே நண்பர்களுடன் இணைந்து சில குறும்படங்களை இயக்கி உள்ள அவர், தற்போது வெளிநாட்டில் படம் இயக்குவது சம்பந்தப்பட்ட கோர்ஸ் படித்து வருகிறார். இந்த நிலையில் சுதா கொங்கராவின் முயற்சிக்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.