தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன் என்ற மூன்று படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்த நிலையில், அடுத்தபடியாக லாக்கப் படத்தை இயக்கிய சார்லஸ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள சொப்பன சுந்தரி படம் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த சொப்பன சுந்தரி படம் திரில்லர் மற்றும் காமெடி கலந்த கதையில் உருவாகி இருக்கிறது.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் லட்சுமி பிரியா, சந்திர மவுலி, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இது தவிர மோகன்தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க, பர்ஹானா என பல படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.




