மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! |
மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, ப்ரியா ஆனந்த், கவுதம் மேனன் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். கடுமையான பனிப்பொழிவுக்கு நடுவே லியோ படப்பிடிப்பு தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது. அதோடு 15 நாட்கள் மட்டுமே அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இரண்டு மாதங்களுக்கு காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் லியோ படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியாகி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது அந்த டைட்டில் டீசரை பிப்ரவரி 17ம் தேதி திரைக்கு வரும் தனுஷின் வாத்தி படத்தின் இடைவெளியின் போது வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதன் காரணமாக லியோ படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது லியோ பட டைட்டில் டீசரை சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பி வைத்துள்ளது.