எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா | உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்… |
மலையாள இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கி இருந்த படம் ரன் பேபி ரன். சமீபத்தில் வெளியான இந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மண் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அப்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் ஜியென் கிருஷ்ணகுமாருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என்று தயாரிப்பாளர் லக்ஷ்மண்குமார் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதிலும் ஆர்ஜே பாலாஜிதான் நடிப்பார் என்று தெரிகிறது. மற்ற விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இது தவிர இயக்குனர் மனு ஆனந்த், ஆண்ட்ரூ லூயிஸ் ஆகியோர் இயக்கும் படங்களையும் தயாரிக்க இருப்பதாக பிரின்ஸ் பிச்சர்ஸ் அறிவித்துள்ளது.