லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால், சாய் தன்ஷிகாவுக்கு நிச்சயதார்த்தம் : பிறந்தநாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி |
வீஜே மகேஸ்வரி விவாகரத்துக்கு பின் கணவரை பிரிந்து தன் மகனுடன் வாழ்ந்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரை, சினிமாக்களில் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வரும் மகேஸ்வரி அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 6லும் பங்கேற்று விளையாடினார். பிக்பாஸ் 6 முடிவுக்கு வந்த நிலையில் அசீமின் வெற்றி குறித்து விமர்சித்திருந்த அவர் தொடர்ந்து விக்ரமனுடனும் நட்பாக பழகி வருகிறார். அசீமின் வெற்றியை விமர்சிப்பதால் கடுப்பான அவரது ஆதரவாளர்கள் மகேஸ்வரி குறித்தும் அவருடைய மகன் குறித்தும் தரக்குறைவான கருத்துகளை சோஷியல் மீடியாவில் பேசி வந்தனர்.
இந்நிலையில் இதற்கு ரியாக்ட் செய்துள்ள மகேஸ்வரி தனது டுவிட்டரில், 'ஒரு போராளியாக இருக்கிறாய் மகனே நன்றி!. நச்சு ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகத்தை நீ பெண்களுக்கான சிறந்த உலகமாய் மாற்றுவாய் என நம்புகிறேன். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். அம்மா உன்னை பாதுகாப்பேன்' என பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் 'புகார் பதிவு செய்யப்பட்டுவிட்டது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் குறிப்பிட்டுள்ளார். மகேஸ்வரியின் விமர்சனத்திற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்திருக்கக் கூடாது என்று அசீமின் ஆதரவாளர்களை பலரும் தற்போது கண்டித்து வருகின்றனர்.