நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல ஹாலிவுட் நடிகை அன்னி வெர்ஷிங். இவர் புரூஸ் அல்மைட்டி, பிலோ த பெல்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். போஷ், டைம்லெஸ் உள்பட 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். 2009ம் ஆண்டு ஒளிபரப்பான 24 என்ற தொடரில் ரெஸி வாக்கர் என்ற கேரக்டரில் நடித்து உலக புகழ் பெற்றார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
45 வயதான அன்னி வெர்ஷிங் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாகவே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்துள்ளார். இதனை அவர் கணவர் ஸ்டீபன் புல் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது குடும்பத்தின் ஆன்மா எங்களை விட்டு பிரிந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.