நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் குடிமகான். நாளைய இயக்குநர் டிவி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிரகாஷ் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார். விஜய் சிவன் அறிமுக நாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . தனுஜ் மேனன் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பிரகாஷ் கூறியதாவது: வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய குடும்பபாங்கான படமாக இந்த குடிமகான் உருவாகியுள்ளது. குடியை பற்றிய படம் என்றாலும் அதை தப்பாக புரமோட் பண்ணும் விதமாக இருக்காது. இந்த நாட்டின் பிரஜையையும் குடிமகன் என்று சொல்வார்கள், குடிப்பவர்களையும் குடிமகன் என்றுதான் அழைக்கிறார்கள். அப்படி ஒரு குடிமகன், குடிமகானாக இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கோணத்தில் இந்த கதை உருவாகியுள்ளது. என்கிறார்.
சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன். சிறுமுதலீட்டு படங்களின் ஆஸ்தான நாயகியாக இருந்த அவர் பிறகு சின்னத்திரைக்கு சென்றார். அங்கு தாழம்பூ, இரட்டை ரோஜா தொடர்களில் நடித்தார். தற்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு திரும்பி இருக்கிறார்.