‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் கிட்டத்தட்ட 100 படங்கள் நடித்து முடித்து விட்டார். அதன்பிறகு பிரித்திவிராஜ் புரொடக்சன்ஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்தும் வருகிறார்/ மேலும் இயக்குனராக மாறி இரண்டு படங்களையும் இயக்கி விட்டார். அதுமட்டுமல்ல மலையாள மொழி தாண்டி, தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் நடிப்பில் வெளியான டிரைவிங் லைசன்ஸ் என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஒரு நடிகருக்கும் அவரது தீவிர ரசிகனுக்கும் இடையே ஈகோ மோதல் ஏற்பட்டால் அது எந்த அளவிற்கு செல்லும் என்பது பற்றி ஒரு புதிய கோணத்தில் இந்த படம் உருவாகி இருந்தால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த படம் இந்தியில் அக்சய் குமார், இம்ரான் காஸ்மின் நடிப்பில் 'செல்பி' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உருவாகி உள்ளது. இந்த படத்தை இந்தியில் நடிகர் பிரித்திவிராஜே தயாரித்தும் உள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரித்விராஜ் இந்த படம் ஒரு முக்கியமான கருத்தை சொல்வதாக உருவாகி இருந்ததால் மற்ற மொழிகளிலும் குறிப்பாக பாலிவுட்டிலும் இது ரீமேக் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதனால் நானே அக்சய் குமாரை தொடர்பு கொண்டு இந்த படம் பற்றி கூறினேன். படத்தை பார்த்த அக்சய் குமார் உடனடியாக இதை ரீமேக் செய்து நடிக்க ஒப்புக்கொண்டார். அதனால் அவருக்கும் இந்த படத்தை அப்படியே அதன் சாரம் கெடாமல் இந்திக்கு ஏற்றபடி மாற்றிய இயக்குனர் ராஜ் மேத்தாவிற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.