நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
ஒரு காலத்தில் வெள்ளிவிழா தயாரிப்பாளர் என்று புகழ்பெற்றவர் கோவைத் தம்பி. மதர்லேண்ட் பிக்சர்ஸ் படம் என்றாலே விநியோகஸ்தர்கள் கண்ணை மூடிக்கொண்டு படத்தை வாங்குவார்கள். இதயகோவில், உதயகீதம், பயணங்கள் முடிவதில்லை, செம்பருத்தி உள்பட இவர் தயாரித்த அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். டிரண்ட் மாறியதும் படத் தயாரிப்பை கைவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சாய்மீரா நிறுவனம் அனுபவம் மிக்க தயாரிப்பாளர்கள் பத்துபேர் மீண்டும் படம் தயாரிக்க உதவி செய்தது. அதில் இவர் "ஏன் இப்படி மயக்கினாய்" என்ற படத்தை தயாரித்தார். அதில்தான் காயத்ரி அறிமுகமானார். அஜீத் மச்சான் ரிச்சர்ட் ஹீரோ. கிருஷ்ணா இயக்கினார். அந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டது.
14 வருடங்களுக்கு பிறகு கோவைத் தம்பி இப்போது மீண்டும் படம் தயாரிக்கிறார். படத்தின் பெயர் "உயிருக்கு உயிராக". இயக்குபவர் இதே மதர்லேண்ட் பிக்சர்சால் மண்ணுக்குள் வைரம் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மனோஜ்குமார். பாரதிராஜாவோட மச்சான். பிரபு, சஞ்சீவ், நந்தனா பிரீத்தி தாஸ் நடிக்கிறார்கள். காயத்ரியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பெற்றவர்கள் பிள்ளைகளை எப்படி கண்டித்தும், கண்காணித்தும், வளர்க்க வேண்டும் என்ற கருத்தை ஒரு காதலோடு கலந்து சொல்லும் படமாம். முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.