நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் | மறுபரிசீலனை செய்யும் விஜய் ஆண்டனி |
பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மகள் தான் பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத். அப்பாவை போலவே அனிதாவும் செய்தியாளராக, செய்திவாசிப்பாளராக ஊடகத்தில் பணியை தொடங்கி பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குபின் இன்று நடிகையாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் ஜனவரி 16ல் ஆர்.சி.சம்பத்தின் பிறந்தநாள். இதனைமுன்னிட்டு அப்பாவை நினைத்து மிக உருக்கமான பதிவொன்றை அனிதா பதிவு செய்திருந்தார். அதில், 'உங்கள பெத்தவங்க இருக்கும் போதே அவங்கள கொண்டாடுங்க. நல்லா பாத்துக்கோங்க' என அன்பான வேண்டுகோளும் வைத்துள்ளார். இதனையடுத்து தந்தையை நினைத்து நெகிழ்ந்து உருகிக் கொண்டிருக்கும் அனிதாவுக்கு பலரும் ஆறுதலையும், அன்பையும் தெரிவித்துள்ளனர்.