'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை |

2014ம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வெளியான படம் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரில் அவர் இயக்கி வருகிறார். இதில் நாயகனாக ராகவா லாரன்சும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது 36 நாட்களில் ஒரே ஷெட்யூலில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இது குறித்து எஸ் .ஜே .சூர்யா வெளியிட்டுள்ள ஒரு பதிவில், என்ன ஒரு கான்செப்ட். என்ன ஒரு செட். என்ன ஒரு போட்டோகிராபி. என்ன ஒரு பிரம்மாண்டம். என்ன ஒரு தயாரிப்பு வேல்யூ, அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளித்த கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ள எஸ் .ஜே .சூர்யா, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்த புகைப்படத்தை பதிவிட்டு, நான் பார்த்த அற்புத உள்ளம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நிமிஷா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.