Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'துணிவு, வாரிசு' - ஏரியாக்கள் விற்கப்பட்ட விலை எவ்வளவு?

15 ஜன, 2023 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Thunivu-and-Varisu-areawise-sold-report

விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' ஆகிய இரண்டு படங்களும் மூன்று நாட்கள் முன்னதாக ஜனவரி 11ம் தேதி வெளியாகின. இரண்டு படங்களில் எந்தப் படம் விரைவில் 100 கோடி வசூலைப் பெறப் போகிறது என இருவரது ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் படங்கள் எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டுள்ளதோ அதைப் பொறுத்தே அவற்றின் லாபம் என்ன என்பது தெரிய வரும். இரண்டு படங்களின் வியாபாரத்திற்கு நிறையவே வித்தியாசம் உள்ளது என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். 'துணிவு' படத்தை விட 'வாரிசு' படம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. சினிமா வியாபாரத்தில் அஜித்தை விட விஜய் முன்னணியில் இருப்பதாகவே தெரிவிக்கிறார்கள்.

இரண்டு படங்களும் எந்தெந்த ஏரியாக்களில் எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து செவி வழி செய்தியாக நமக்கு வந்த தகவலைத் தருகிறோம்.

'வாரிசு' படத்தின் பட்ஜெட் விஜய்யின் சம்பளத்துடன் சேர்த்து சுமார் 200 கோடி என்கிறார்கள். தமிழக வெளியீட்டு உரிமை 70 கோடி, தெலுங்கு உரிமை 15 கோடி, கர்நாடகா 7 கோடி, கேரளா 6 கோடி, வெளிநாடுகள் 30 கோடி, ஹிந்தி உரிமை 30 கோடி. ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ உரிமை ஆகியவை மூலம் வெளியீட்டிற்கு முன்பாக 120 கோடி வந்துவிட்டது எனத் தகவல். தியேட்டர் வசூலைப் பொறுத்தவரையில் 175 கோடிக்கும் அதிகமாக வசூலித்தால் படம் லாபகரமாக அமையுமாம். இப்போதுள்ள நிலையில் ஹிந்தி உரிமையை லாபகரமாக எடுப்பது மட்டும் சிரமம் என்று தகவல்.

'துணிவு' படத்தின் பட்ஜெட் அஜித்தின் சம்பளத்துடன் சேர்த்து 160 கோடி என்கிறார்கள். தமிழக தியேட்டர் உரிமை 60 கோடி, தெலுங்கு உரிமை 1.5 கோடி, கர்நாடகா உரிமை 3.5 கோடி, கேரளா உரிமை 2.5 கோடி, ஹிந்தி உரிமை 20 கோடி, வெளிநாடுகள் உரிமை 15 கோடி. ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ உரிமை ஆகியவை மூலம் வெளியீட்டிற்கு முன்பாகவே சுமார் 90 கோடி வந்துவிட்டது எனத் தகவல். தியேட்டர் வசூலைப் பொறுத்தவரையில் 120 கோடி வசூலித்தால் படம் லாபகரமாக அமையுமாம்.

இரண்டு படங்களுமே 'டேபிள் பிராபிட்' பார்த்துவிட்டது. தியேட்டர் வசூலும் விடுமுறை நாள் என்பதால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால், இரண்டு படங்களுமே நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புண்டு. லாபத்தில் எந்தப் படம் அதிக லாபம் பெறப் போகிறது என்பது இரண்டு படங்களும் ஓடி முடித்த பிறகே தெரியும்.

குறிப்பு - மேலே குறிப்பிட்டுள்ள தொகை விவரங்கள் அதிகாரப்பூர்வமற்றவை. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல இடங்களில் விசாரித்ததன் அடிப்படையில் செவி வழி வந்த விவரங்களைத்தான் குறிப்பிட்டுள்ளோம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛ரிவால்வர் ரீட்டா'-வாக மாறிய கீர்த்தி சுரேஷ்‛ரிவால்வர் ரீட்டா'-வாக மாறிய ... 'வாரிசு' இயக்குனர் வம்சியை கட்டித் தழுவி வாழ்த்திய அவரது அப்பா 'வாரிசு' இயக்குனர் வம்சியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in