பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் |
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து வரும் படம் சந்திரமுகி 2 . சந்திரமுகி படத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இதில் முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். தலைவி படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில் இந்த படத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து வருகிறார் கங்கனா.
சமீபகாலமாக அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து அவ்வப்போது கருத்து சொல்லி வருவதால் அவர் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறார். இதன் காரணமாக அவுட்டோர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சந்திரமுகி -2 படப்பிடிப்பு தளத்திற்கு தனது மேக்கப் மேன்கள், காஸ்டியூமர்கள் மட்டுமின்றி துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் நான்கு பேர் அடங்கிய செக்யூரிட்டியுடன் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து செல்கிறார் கங்கனா. இதனால் அவர் சந்திரமுகி-2 படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் பரபரப்பு நிலவிக் கொண்டிருக்கிறது.