ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி |

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி ,ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலரது நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இதன்  இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 16வது ஆசிய திரைப்பட விழாவில் ஆறு பிரிவுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தகுதி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த பட தொகுப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கலை இயக்குனர், சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் என ஆறு பிரிவுகளில் இந்த இப்படம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தந்த பிரிவுகளுக்கு விருது கிடைக்கப் போகிறதோ என்று பொன்னியின் செல்வன் படக்குழு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            