போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | 'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன் | மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? |
2023 பொங்கலை முன்னிட்டு தமிழில் விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணா நடித்துள்ள 'வீரசிம்ஹா ரெட்டி' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
அமெரிக்காவிலும் இந்த நான்கு படங்களும் அதிக அளவிலான தியேட்டர்களில் வெளியாகின்றன. ஆனால், தமிழ்ப் படங்களான 'வாரிசு, துணிவு' ஆகிய படங்களை விட தெலுங்குப் படங்களான 'வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி' ஆகிய படங்களின் முன்பதிவு அதிக அளவில் நடந்து வருகிறது.
பிரிமீயர் காட்சிகளைப் பொறுத்தவரையில் 'வீரசிம்ஹா ரெட்டி' படத்திற்கான முன்பதிவு 3 லட்சம் அமெரிக்க டாலர்களையும், 'வால்டர் வீரய்யா' முன்பதிவு 2 லட்சம் அமெரிக்க டாலர்களையும், 'துணிவு' முன்பதிவு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களையும், 'வாரிசு' முன்பதிவு 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களையும் கடந்துள்ளது.
'வாரிசு' படத்தின் வெளியீட்டுத் தேதி திடீரென மாற்றப்பட்டதால் அதன் முன்பதிவு பின்தங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். பிரிமீயர் காட்சிகளுக்கு முன்கூட்டியே தியேட்டர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டுமாம். தேதி மாற்றப்பட்டதால் 'வாரிசு' பட முன்பதிவில் குழப்பம் ஏற்பட்டு அது பின்னடைவைச் சந்தித்துள்ளது.