இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ள 'வாரிசு' படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. தமிழ் சினிமா டிரைலர் வரலாற்றில், ஏன் தென்னிந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'துணிவு' படத்தின் வரலாற்றையே முறியடிக்க முடியாமல் தடுமாறிப் போய்விட்டது.
விஜய் தற்போது ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். அவரிடமிருந்து ஒரு முழுமையான ஆக்ஷன் படத்தையே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்தப் படம் ஒரு சென்டிமென்ட் குடும்பப் படமாக அமைந்துள்ளது.
டிரைலரின் ஆரம்பத்திலேயே வரும் பெண் குரல் ஒரு சீரியல் எபெக்ட்டையே கொடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து வரும் நடிகர் சுமனின் குரல், பல தெலுங்கு டப்பிங் படங்களில் கேட்ட ஒரு குரல் என்பதால் ஒரு டப்பிங் பட உணர்வை ஆரம்பத்திலேயே கொடுத்துவிட்டது.
“எல்லா இடமும் நம்ம இடம்தான்”, “இன் பிசினஸ் ஆல்வேஸ் பீ அலர்ட், நல்ல வேட்டைக்காரனுக்கு கண்ணுல மண்ணு விழுந்தாலும், கண்ணு தொறந்தேதான் இருக்கணும்”, “வேடனுக்கு வேட்டைத் தொழில்”, “பவர் சீட்ல இருக்காது சார், அதுல வந்து ஒருத்தன் உக்கார்றான் இல்ல அவன்ட்டதான் இருக்கும், நம்ம பவர் அந்த ரகம்”, “அன்போ, அடியோ எனக்குக் கொடுக்கும் போது கொஞ்சம் யோசிச்சி கொடுக்கணும், ஏன் சொல்லு, நீ எதைக் கொடுத்தாலும் நான் அதை ட்ரிபிளா திருப்பிக் கொடுப்பேன்“, “கிரவுண்டு மொத்தம் உன் ஆளுங்க இருக்கலாம், ஆனால், ஆடியன்ஸ் மட்டும் ஒருத்தரைத்தான் பார்ப்பாங்க, கேள்விப்பட்டிருக்கியா, ஆட்ட நாயகன்”, “குடும்பம்னா குறை இருக்கும்தான், ஆனா நமக்குன்னு இருக்கிறது ஒரே ஒரு குடும்பம்தான்,” ஆகிய டிரைலரில் உள்ள வசனங்கள் 'க்ரிஞ்ச்' வசனங்களாகவே உள்ளன.
விஜய் - பிரகாஷ்ராஜ் மோதல் என்றாலே 'கில்லி' படத்தின் 'வேலு - முத்துப்பாண்டி' தான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த மோதலை மிஞ்ச இனி வேறு எந்தப் படத்தாலும், கதாபாத்திரங்களாலும் முடியாது. இரண்டு நிமிட டிரைலரின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு சீரியலுக்கான டிரைலரோ என யோசிக்க வைக்கிறது. சீரியல்களில் கூட பரபரப்பாக பின்னணிக் குரல் கொடுத்து டிரைலரைக் 'கட்' செய்வார்கள்.
விஜய்யின் பன்ச் வசனங்கள் ஒவ்வொன்றும் கதையோடு சேர்ந்து வருவது போலத் தெரியவில்லை. இடைச் செருகலாக சேர்த்து வைக்கப்பட்டவையாகவே தெரிகிறது. ராஷ்மிகா மந்தனாவிற்கு டிரைலரில் ஒரு வசனத்தைக் கூட வைக்கவில்லை.
டிரைலரில் விஜய்க்குப் பதிலாக மகேஷ் பாபு இருந்திருந்தால் கூட வித்தியாசம் தெரிந்திருக்காது என்றே தோன்றுகிறது. விஜய்க்காக தனிப்பட்டு வடிவமைக்கப்பட்ட கதை போலத் தெரியவில்லை. மகேஷ்பாபுவுக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் நடித்திருக்கிறார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
அஜித்தின் 'துணிவு' டிரைலர் முழு ஆக்ஷனாக இருக்கும் போது, இந்த 'வாரிசு' டிரைலர் அப்படியில்லாததும் குறைதான். ஒரு படத்தின் டிரைலர் தான் அந்தப் படத்தைப் பார்க்க ரசிகர்களை ஆவலுடன் தியேட்டர்கள் பக்கம் வரவழைக்கும். அப்படி ஒரு ஆவலை ஏற்படுத்தாத டிரைலராகவே 'வாரிசு' டிரைலர் இருக்கிறது என்பதுதான் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. 'பீஸ்ட்' டிரைலரின் சாதனையை முறியடித்து தென்னிந்தியாவின் நம்பர் 1 டிரைலர் என்ற சாதனையை சில நாட்களில் இந்த 'வாரிசு' டிரைலர் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 24 மணி நேர சாதனையில் 'துணிவு' டிரைலர் சாதனையை முறியடிக்க முடியாமல் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
டிரைலர் கொஞ்சம் ஏமாற்றி 'அவுட்' ஆக்கினாலும், மெயின் பிக்சர் விஜய் சொல்வது போல 'ஆட்ட நாயகன்' ஆக அமைந்தால் அவரது ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.