தமிழ் மார்க்கெட்டை குறி வைக்கும் ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ | தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் |

ஹாலிவுட்டில் புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் படங்களில் ஹாவ்க் கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் ஜெர்மி ரெனர். தோர், கேப்டன் அமெரிக்கா, கில் தி மெசன்ஜர், பிளாக் விடோ உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் நடித்தார். கடைசியாக கிளாஸ்: 'ஆனியன் எ நைவ்ஸ் அவுட் மிஸ்ட்ரி' படத்தில் நடித்தார்.
அமெரிக்காவிலுள்ள ரோஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் வசித்து வருகிறார். இந்த பகுதியை புத்தாண்டு தினத்தன்று பனிப்புயல் ஒன்று தாக்கியது. இந்த விவரம் அறியாமல் தனது வீட்டிற்கு ஜெர்மி ரெனர் காரில் சென்றுள்ளார். அப்போது, கடும் குளிர் காற்றுடன் பனிப்பொழிவு கொட்டியதால், கட்டுப்பாட்டை இழந்த ரெனரின் கார் சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர், படுகாயமடைந்த ரெனரை மீட்டு, விமானம் மூலம் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நலம் குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில், விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஜெர்மி ரெனர் ஆபத்தான நிலையில் உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை சீராக உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மியின் குடும்பத்தினர் அவருடன் இருப்பதாகவும், சிறந்த சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அவர் விரைந்து குணம் பெற வேண்டும் அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.




