சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 2024ம் ஆண்டு படம் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் நடிகை திரிஷாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமலுடன் மன்மதன் அம்பு, தூங்காவனம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் திரிஷா.




