'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பல கதைகளை உள்ளடக்கிய அந்தாலஜி படங்கள் அதிக அளவில் வெளிவரத் தொடங்கி உள்ளன. அவைகள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அந்த வரிசையில் அடுத்து வரும் அந்தாலஜி படம் ‛ஸ்டோரி ஆப் திங்ஸ்'.
மனிதர்களைச் சுற்றி நடக்கும் கதைகளின் தொகுப்பாக இது உருவாகி உள்ளது. இது மனிதர்களின் கதைகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையிலான உண்மை மற்றும் அதற்கு அப்பால் இருக்கும் வெளியை நோக்கி நகரும் கதையாக அமைகிறது. செல்லுலார், வெய்க்கிங் ஸ்கேல், கம்ப்ரசர், கார், மிரர் ஆகிய தலைப்பில் 5 கதைகள் இடம்பெறுகிறது.
வினோத் கிஷன், அன்ஷிதா ஆனந்த், அதிதி பாலன், கெளதமி, அர்ஜூன் ராதாகிருஷ்ணன், சாந்தனு பாக்யராஜ், சித்திக், பரத், அர்ச்சனா. பரத் நிவாஸ், ரித்திகா சிங், ரோஜூ நடித்துள்ளனர். ஜார்ஜ் கே.ஆண்டனி இயக்கியுள்ளார். ஹர்ஷவர்த்தன் வாக்தாரே ஒளிப்பதிவு செய்துள்ளார், மேட்லி புளூஸ் குழுவினர் இசை அமைத்துள்ளர். வருகிற ஜனவரி 6ம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாகிறது.