ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் கமல் மொபைலில் பயன்படுத்தும் ஒரு ரிங்டோனாக மன்சூர் அலிகான் நடனமாடி நடித்திருந்த சக்கு சக்கு ஒத்திக்கிச்சு என்கிற பாடல் இடம்பெற்று அது ரசிகர்களிடமும் வைரலாக பரவியது. அதைத்தொடர்ந்து வெளியான பேட்டிகளில் லோகேஷ் கனகராஜிடம் மன்சூரலிகான் பாடல் இடம் பெற்றது குறித்து கேட்கப்பட்டபோது, தான் மன்சூர் அலிகானின் தீவிர ரசிகர் என்றும் கைதி படத்தில் கூட முதலில் கார்த்தி நடித்த கதாபாத்திரத்திற்கு மன்சூர் அலிகானை தான் மனதில் வைத்து கதையை எழுதியதாகவும் கூறியிருந்தார்.
அடுத்து தான் இயக்கும் படத்தில் அவருக்கான கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் அவரை நடிக்க வைப்பேன் என்றும் லோகேஷ் கனகராஜ் அப்போது குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்யின் 67வது படத்தில் தான் நடிப்பதாக ஒரு செய்தியை அவரே வெளியிட்டுள்ளார்.




