Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்கதை லீக்அவுட் ஆனது!

25 டிச, 2022 - 16:58 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan's-Maaveeran-story-leaked!

பிரின்ஸ் படத்திற்கு பிறகு மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். சரிதா, புஷ்பா சுனில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மாவீரன் படத்தின் கதை குறித்த ஒரு தகவல் கசிந்துள்ளது.

அதாவது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கார்ட்டூனிஷ்டாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு அவர் எந்த மாதிரியான கார்ட்டூன் வரைந்தாலும் அது அப்படியே அவருடைய நிஜ வாழ்க்கையில் தோன்றி விடுவதோடு, அந்த கார்ட்டூன்களால் அவர் சந்திக்கும் பிரச்னைகள்தான் இந்த மாவீரன் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதியின் ‛மெர்ரி கிறிஸ்துமஸ்' ரிலீஸ் தேதி தள்ளிப்போனது!விஜய் சேதுபதியின் ‛மெர்ரி ... துணிவு பட புரமோஷன் ஜனவரி 1ம் தேதி நடக்கிறது! வழக்கம்போல் அஜித் மிஸ்ஸிங்கா? துணிவு பட புரமோஷன் ஜனவரி 1ம் தேதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

25 டிச, 2022 - 22:02 Report Abuse
Arjun Anand வாரிசு படத்தின் கதை இதுதான். வாரிசு படத்தில் தளபதி விஜய் இரண்டு ரோல். ஒரு வயசான விஜய் இன்னொருவர் இளம் வயது விஜய். படத்தின் ஆரம்பத்தில் ஒரு ஃபிளாஷ் பேக் அதாவது கதை 1998 ஆம் ஆண்டை நோக்கி நகர்கிறது. அப்போது நடுத்தர வயதில் இருக்கும் விஜய் ஒரு சலூன் கடை நடத்தி வருகிறார். அவர் மிகப்பெரிய 90s கிட்ஸ் ஸ்டைலிஸ்ட்.. ஒரு நாள் அவர் சலூனுக்கு ஒரு வாடிக்கையாளர் முடி திருத்தம் செய்ய வருகிறார் அப்போது எதிர்பாராத விதமாக விஜய் அவர் முடியை தவறாக திருத்தம் செய்து விடுகிறார் உடனே அந்த வாடிக்கையாளருக்கு கோபம் வந்து விஜய்யின் தலையில் ஒரு உதை விடுகிறார் அப்ப விஜய்யின் விக்கு கழண்டு கீழே விழுந்து விடுகிறது அதை கண்டு அனைவரும் அதிர்ச்சி 😱அடைகிறார்கள். 90s கிட்ஸ்-ன் நம்பர் ஒன் முடி ஸ்டைலிஸ்டான விஜய் ஒரு சொட்டை மண்டையா என்று மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் 😱😱 இதை கண்ட விஜய்க்கு ஒரே அவமானம் ஆகிவிட்டது.. சிறிது நேரம் கழித்து அதை நினைத்தபடியே சலூன் கடையில் ஒரு ஓரமாக அமர்ந்து அழுது கொண்டு இருக்கிறார் அப்போது விஜய்யின் தம்பி சலூன் கடைக்கு ஓடி வந்தபடி "அண்ணா அண்ணா நீ அப்பா ஆகிட்ட அண்ணா " அப்படினு கத்திக் கொண்டே அவர் தம்பி ஓடி வருகிறார் உடனே மகிழ்ச்சி அடைந்த விஜய் ஒரு அனல் பறக்கும் வீர வசனம் பேசுகிறார் "ஆட்டுக்கு பின்னாடி விழுந்தா புழுக்க எனக்கு முன்னாடி விழுந்தா வழுக்க" இந்த வழுக்கை தலையில் நானும் முடி வளர்த்து காட்டுறேன்டா அதுவும் என் வாரிசு இந்த உலகத்தில் பிறக்குறத்துக்கு முன்னாடியே காட்டுறேன்டா ~ அப்படினு சவாலாக வீரவசனம் பேசுகிறார்.. ஆனால் வீரவசனம் பேசியதை போல் விஜய்யால் தன் வழுக்கை தலையில் முடி வளர்க்க முடியவில்லை பின் குழந்தையும் பிறந்தது அந்த குழந்தை தான் குட்டி விஜய் அந்த குழந்தையை காண சொட்டை விஜய் மருத்துவமனைக்கு ஓடி சென்று அங்கு குட்டி இளம் விஜய்யை கையில் தூக்கி ஒரு வீரவசனம் பேசுகிறார் "நான் தான் இந்த உலகத்தில் சொட்டையாக பிறந்து அவமானம் அடைந்தேன் ஆனால் நீ சொட்டையாக இருக்க கூடாது" என்று அழுதுகொண்டே வசனம் பேசுகிறார். பின் சிறுவயதில் இருந்தே குட்டி இளம் விஜய்க்கு முடி வளருவதற்கான எல்லா உணவுகளையும் சொட்டை விஜய் ஊட்டி வளர்க்கிறார். தன் சலூன் கடையில் பத்திரமாக குட்டி இளம் விஜய்க்கு முடி திருத்தம் செய்கிறார்...அப்படியே காலம் நகர்ந்து 2023 ஆம் ஆண்டுக்கு வருகிறது இப்போ குட்டி இளம் விஜய்க்கு 25வயது. அவர் உலகின் மிகப்பெரிய Dermatologist. PhD in Hair technology பட்டம் பெற்று இருக்கிறார். ஒரு நாள் தன் சித்தப்பா பேச்சு வாக்கில் தன் அண்ணன் சொட்டை விஜய்யின் சோகமான கடந்த கால கதையை இளம் விஜய்க்கு கூறுகிறார் அப்போது அதிர்ச்சி அடைந்த இளம் விஜய் ஒரு வசனம் பேசுகிறார் அதாவது ""ஊருக்கெல்லாம் முடி சிகிச்சை செய்து முடி வளர செய்கிறேன் ஆனால் என் அப்பாவுக்கு செய்ய விட்டுட்டேன்...இப்ப சொல்லுறேன் நான் அப்பாவுக்கு முடி சிகிச்சை செய்து முடி வளர செய்வேன் இது சத்தியம்""" அப்படினு சவாலாக வீரவசனம் பேசுகிறார்... வசனம் பேசுவது மட்டும் இல்லாமல் தன் சொட்டை தந்தை தலையில் முடியும் வளர்த்து காட்டுகிறார்.... சொட்டை விஜய்க்கு இப்போ முடி வளர்ந்து விட்டது அப்படியே ஆனந்த கண்ணீரில் புன்னகையுடன் ஒரு வசனம் சொல்கிறார் "தன்னால் முடியாதது தன் வாரிசால் முடிந்தது" இத்துடன் கதையும் முடிந்தது. நன்றி வணக்கம் 🙏
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in