ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் 'வாரிசு'.
தில் ராஜு தயாரிப்பில், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தெலுங்கில் 2019ம் ஆண்டு மகேஷ் பாபு நடித்து வெளிவந்த 'மகரிஷி' படத்தின் தமிழ் ரீமேக் தான் 'வாரிசு' என்ற ஒரு வதந்தி கடந்த சில வாரங்களாகவே கோலிவுட், டோலிவுட் வட்டாரங்களில் இருந்தது வந்தது. அந்த வதந்திகளுக்கு நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் தில் ராஜு.
அவர் பேசுகையில், “வாரிசு எந்த ஒரு படத்தின் ரீமேக்கோ, தொடர்ச்சியோ அல்ல. அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்கும்படியான ஒரு முழுமையான தமிழ்ப் படம். இப்படத்தைப் பார்த்து தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இப்படம் தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, ஹிந்தியிலும் பெரிய வெற்றி பெறும். நடிகர் விஜய் சினிமாவில் மட்டும் சூப்பர் ஸ்டார் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவரை முதன்முதலில் பார்க்கச் சென்ற போது அவரே எனக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார். அரை மணி நேரம்தான் கதை சொன்னோம். கதை நன்றாக இருக்கிறது, பண்ணலாம் என உடனே சொன்னார்,” என்று பேசினார்.