ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் திகங்கனா சூர்யவன்ஷி. அதன்பிறகு ஹிப்பி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தனுஷ் ராசி நேயர்களே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் அரசியலில் நுழைய இருக்கிறார் திகங்கனா.
தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் அந்ததந்த மாநிலத்தில் உள்ள கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். ராகுல் காந்தி தற்போது ராஜஸ்தானில் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் திகங்கனா கலந்து கொண்டார்.
அவர் ராகுலின் கையை பிடித்தக் கொண்டு நடக்கும் வீடியோ நேற்று வைரலாக பரவியது. இதனால் அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற தவல்கள் வெளியாகி உள்ளது. திகங்கனா பாலிவுட் நடிகை என்பதால் ஒரு விளம்பரத்திற்காக அவர் இந்த பயணத்தில் கலந்து கொள்ள வைக்கப்பட்டார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து திகங்கனா கூறும்போது “இது எதிர்பாராத ஒரு பயணம். நாட்டின் ஒற்றுமைக்காக ராகுல்ஜி மேற்கொண்டுள்ள இந்த பயணத்தில் நான் ஒரு பங்கு வகித்தேன் அவ்வளவுதான்” என்கிறார்.
ராகுலின் நடைபயணத்தில் இதற்கு முன்பும் பல நடிகைகள் பங்கேற்று இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.