175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
மலையாளத்தில் மோகன்லால் ஜீத்து ஜோசப் கூட்டணிகள் உருவான திரிஷ்யம் படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல பாலிவுட்டிலும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா தபு ஆகியோர் நடிப்பில் ரீமேக்காகி வெளியானது. ஆனால் தென்னிந்திய மொழிகளைப் போல ஹிந்தியில் அந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை. மறைந்த இயக்குனர் நிஷிகாந்த் காமத் அந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் 2 படம் முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது இந்தியிலும் அஜய்தேவ்கன், ஸ்ரேயா என அதே கூட்டணியில் இந்த படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தை அபிஷேக் பதக் இயக்கியிருந்தார். ஆச்சரியமாக இந்த இரண்டாவது பாகத்திற்கு இந்தியில் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர். படம் வெளியாகி கிட்டத்தட்ட இருபத்தி மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் 200 கோடி வசூல் கிளப்பில், இந்த படம் இடம் பிடித்துள்ளது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.