2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன், பாபா, ஆளவந்தான் என பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா. அதன்பிறகு 2011ல் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் அவரது மாமியார் வேடத்தில் நடித்தார். கடந்த 2010ல் சாம்ராட் என்பவரை திருமணம் செய்து கொண்ட மனிஷா கொய்ராலா இரண்டு ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார். பின்னர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டார்.
இந்தநிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஆரம்பத்தில் கேமரா முன்பு தைரியமாக நடிப்பதற்காக மது குடிக்கத் தொடங்கினேன். ஆனால் நாளடைவில் அந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன். மது குடிக்கவில்லை என்றால் இரவில் தூக்கமே வராது என்கிற நிலைக்கு தள்ளப்பட்டேன். இந்த பழக்கத்தால் என் வாழ்க்கையே பாதிக்கப்பட்டது. பின் புற்றுநோய் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் பாடத்தை கற்றுக் கொண்டேன் என்கிறார் மனிஷா கொய்ராலா.