பூத் பங்களாவுக்காக 14 வருடம் கழித்து பிரியதர்ஷனுடன் இணையும் அக்ஷய் குமார் | என் திரையுலக பயணத்தை முடக்கிய பவர் மனிதர் ; 'குஞ்சாக்கோ போபன்' பட இயக்குனர் விரக்தி | இயக்குனர்களை ரஜினி மதிக்கும் விதம் அருமை : வேட்டையன் இயக்குனர் ஞானவேல் புகழாரம் | சூர்யா 44வது படத்தில் அப்பா உடன் இணைந்த காளிதாஸ் ஜெயராம் | முகத்தில் தீக்காயத்துடன் கனிகா? பதறிய ரசிகர்கள் | 22 வருஷமாயிருக்கேன் எனக்கே இப்படி நடக்குது - சீரியல் நடிகை ராணி | சினிமாவில் ஹீரோவாக குமரன் தங்கராஜன் | பிளாஷ்பேக் : வெளியீட்டுக்குப் பிறகு காட்சிகள் குறைக்கப்பட்ட முதல் படம். | 'எமர்ஜென்சி' படத்தால் நிதி நெருக்கடி : மும்பை பங்களாவை 32 கோடிக்கு விற்றார் கங்கனா | தமிழில் ரீமேக் ஆன ஹிந்தி வெப் தொடர் |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம் 'பதான்'. 2023ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் கடந்த மாதம் ஷாரூக்கின் பிறந்த தினத்தன்று வெளியாகியது.
அடுத்து இப்படத்தின் முதல் சிங்கிளான 'பேஷராம் ரன்ங்' என்ற பாடலை டிசம்பர் 12ம் தேதியன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளனர். அதற்கான அறிவிப்புப் போஸ்டரில் தீபிகா படுகோனே நீச்சல் உடையில் இருக்கும் போஸ்டர்களைப் பகிர்ந்துதான் படக்குழு அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நேற்று ஒரு போஸ்டர், இன்று ஒரு போஸ்டர் என இரண்டிலுமே நீச்சல் உடையில்தான் இருக்கிறார் தீபிகா.
இன்றைய போஸ்டரைப் பகிர்ந்து ஷாருக்கான், “சுவற்றின் மீது கண்ணாடி, அவர்களில் மிக கிளாமராக இருப்பவர் அவர்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார். போஸ்டரில் சிறிதாக இடம் பெற்றிருந்த அந்த போட்டோவை, தனது இன்ஸ்டாகிராமில் பெரிதாகப் பதிவிட்டு அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தீபிகா. அடுத்தடுத்து தீபிகாவின் இரண்டு நீச்சல் உடை போஸ்டர்களுடன் வெளியாகியுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 12ம் தேதியன்று அந்தப் பாடல் வெளியானால் அது பரபரப்புடன், அதிக பார்வையையும் யு டியூபிலும், சமூக வலைத்தளங்களிலும் அள்ளும் என்பது உறுதி.