அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடித்துள்ள படம் துணிவு. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்திருக்கிறார். பொங்களுக்கு திரைக்கு வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். துணிவு படத்தில் வைசாக் என்பவர் எழுதிய சில்லா சில்லா என்ற பாடல் இன்று மாலை வெளியாகிறது. அனிருத் இந்த பாடலை பாடி இருக்கிறார். முக்கியமாக இந்த துணிவு படம் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு ஐம்பதாவது படமாகும். இதனால் தற்போது அவருக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் எச்.வினோத் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், துணிவு படம் சமூகப் பிரச்சினையை சொல்லும் கதை அல்ல. இது முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் படம். பேமிலி ஆடியன்ஸை கருத்தில் கொண்டு இந்த படத்தை இயக்கி இருக்கிறேன். அதோடு இந்த படத்தில் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்புகளில் இதுவரை பார்க்காத வேற மாதிரியான அஜித் குமாரை பார்க்கலாம் . முக்கியமாக இந்த படத்தின் ஒரு சண்டை காட்சியில் கூட அஜித் டூப் போடாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார் வினோத்.