'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா சில வருடங்களுக்கு முன்பு வரை இளைஞர்கள் ரசிக்கும் விதமாக புதுமையான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து வந்தவர். சில ஆண்டுகளாக அவர் இயக்கும் படங்கள் பேசுவதைவிட அவரது பரபரப்பான சர்ச்சையான கருத்துக்கள்தான் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் அவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் குறித்து வெளியிட்ட பதிவுகளும் அவரைப் பற்றி எடுத்த குறும்படமும் பரபரப்பைக் கிளப்பின. மேலும் கவர்ச்சியான படங்களையும் எடுத்து வருகிறார்.
இந்தநிலையில் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள டேஞ்சரஸ் என்கிற திரைப்படம் நாளை (டிச-9) வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷனுக்காக பிக்பாஸ் புகழ் அஷு ரெட்டி என்பவரிடம் பேட்டி கொடுப்பது போன்று ஒன்றரை மணி நேரம் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வர்மா. அந்த வீடியோவை வெளியிடுவதற்கு முன்னதாக அஷு ரெட்டியின் பாதத்தை குறிப்பாக அவரது கால் விரல்களை முத்தமிடுவது போன்ற வீடியோவை பதிவிட்டு அதன் முழு வீடியோவை விரைவில் வெளியிடுவதாக கூறி ரசிகர்களை உசுப்பேற்றினார். பின்னர் அந்த வீடியோ வெளியாகியது. தற்போது வரை அந்த வீடியோவை 1.4 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
புரமோஷனுக்காக இன்னும் என்னவெல்லாம் செய்வார் ராம்கோபால் வர்மா என அவரை ரசிகர்கள் வசை பாடி வருகின்றனர்.